உள்ளடக்கத்துக்குச் செல்

கெல்லிங்கின் சோதனை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கெல்லிங்கின் சோதனை (Kelling's test) என்பது இரைப்பை நீரில் லாக்டிக் அமிலத்தின் இருப்பைக் கண்டறிய உதவும் ஒரு சோதனையாகும்.

செயல்முறை

[தொகு]

இரண்டு சொட்டுகள் இரும்பு(III) குளோரைடை வாலை வடிநீருடன் சேர்த்து ஒரு சோதனைக் குழாயில் எடுத்துக் கொள்ளப்படுகிறது. கரைசலை நன்றாகக் கலந்து இரண்டு பகுதிகளாகப் பிரித்துக் கொள்ள வேண்டும். ஒரு மில்லிலிட்டர் இரைப்பை நீரை ஒரு சோதனைக் குழாயிலும், அதே அளவு வாலை வடிநீரை ஒரு கட்டுப்படுத்தியாக மற்றொரு சோதனைக் குழாயிலும் எடுத்துக் கொள்ள வேண்டும். இரைப்பை நீர் உள்ள சோதனைக் குழாயில் லாக்டிக் அமிலம் இருந்தால் பெர்ரிக் லாக்டேட் உருவாகி கரைசல் மஞ்சள் நிறமாகிறது [1][2][3][4].

மேற்கோள்கள்

[தொகு]
  1. Sood (2006). Textbook of Medical Laboratory Technology. Jaypee Brothers Publishers. p. 444. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-8061-591-7.[தொடர்பிழந்த இணைப்பு]
  2. K. Bhattacharya & G.K. Chakraborty; Ganendrakumar Chakravarti. A Handbook of Clinical Pathology. Academic Publishers. p. 205. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-87504-85-6.
  3. Dandekar (1 January 2004). Practicals And Viva In Medical Biochemistry. Elsevier India. p. 33. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-8147-025-6.
  4. Yadav (1 January 2003). Comprehensive Practical and Viva in Biochemistry. Jaypee Brothers Publishers. p. 84. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-8061-210-7.[தொடர்பிழந்த இணைப்பு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=கெல்லிங்கின்_சோதனை&oldid=3649541" இலிருந்து மீள்விக்கப்பட்டது